கனடாவில், இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 25 வருட சிறைத்தண்டைனை விதித்து தீர்ப்பளித்தது அந்நாட்டு நீதிமன்றம்.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை வளாகத்தில், விஷால் வாலியா என்பவர் 2022ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற நபர்கள், அவருடைய வாகனத்தையும் தீவைத்து எரித்தனர்.
அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள்
பிரிட்டிஷ் கொலம்பியா நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரும், வான்கூவர் காவல்துறையினரும் இணைந்து சில நிமிடங்களிலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

வாகனத்தில் தப்பியோடிய பல்ராஜ் பஸ்ரா, இக்பால் காங், டியான்ட்ரே பாப்டிஸ்ட் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில், பல்ராஜ் பஸ்ரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
25 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்ராஜ் பஸ்ராவை முதல் குற்றவாளியாக அறிவித்து, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீவைப்பு வழக்கில் இக்பால் காங்கிற்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாப்டிஸ்டுக்கு, 17 ஆண்டுகள் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

