யாழ். (Jaffna) வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த கோர விபத்து இன்று (28.10.2024) காலை 7.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீட்டர் தூரத்தில் வைத்தியர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.