முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்பப்பட்டமை
மற்றும் மாசுபாடு ஏற்பட்டமை போன்ற காரணங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம்
என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், கிராண்ட்பாஸ் புனித
ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனையின் போது அவர் இதனை
குறிப்பிட்;டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத முறையில்
இ;ந்தநிலையில், முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில்
நிரப்புவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் கம்பஹா நகரம் நீரில் மூழ்கியதை தாம் பார்த்ததில்லை.
மாறாக,முத்துராஜவெலவை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்பியதன் விளைவாக இந்த
முறை அந்த நகரம் நீரில் மூழ்கியதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

