அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பாப்பரசர் ஒருவரை தேர்ந்தெடுக்க
வத்திக்கானில் செல்வாக்கு செலுத்தியதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்
ரஞ்சித் குற்றம் சாட்டியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகும் செய்திகள்
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த செய்தி போலியானது என்று கர்தினாலின்
பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் கர்தினால் ரஞ்சித், தனது ஏமாற்றத்தை
வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியும் முற்றிலும்
போலியானது என்று அருட்தந்தை பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

