ஆயிரக்கணக்கான வாகனங்களை மெக்சிகோவிற்கு (Mexico) ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பிடித்து எரிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பலானது அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
கப்பலின் தீயணைப்பு அமைப்பைப் பயன்படுத்தி அவசரகால தீயணைப்பு நடைமுறைகளை கப்பலின் பணியாளர்கள் தொடங்கிய போதிலும், அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
உயிர் காக்கும் படகு
இதன் விளைவாக, கப்பலின் 22 பணியாளர்கள் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் தப்பிச் சென்றனர்.

வடக்கு பசிபிக் பெருங்கடலில் பயணித்த ஒரு வணிகக் கப்பலால் பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த சரக்குக் கப்பலில் 800 மின்சார கார்கள் உட்பட 3000 வாகனங்கள் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

