முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர்
எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.குருபரன் மனுவைத் தாக்கல்
செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவனுக்கு வகுப்புத் தடை

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால்
சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு | Case Filed Against 3 Including The Vc Jaffna Uni

இந்த வகுப்புத்
தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி ரகுராம் முன்வைத்த
முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு
வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவேந்தரிடம் முறைப்பாடு

இந்த வகுப்புத் தடையைச்
சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவன் சிவகஜனால் இந்த மனுத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு | Case Filed Against 3 Including The Vc Jaffna Uni

தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில்
ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என்று ரகுராம்
துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு கலைப்பீடாதிபதி ரகுராம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/_O9Pzs6P9cI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்