முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானு ஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: ஒருவர் காயம்

நுவரெலியா (Nuwara Eliya) – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று(18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதி

வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நானு ஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: ஒருவர் காயம் | Cattle Lorry Accident In Nanuoya One Injured

 இந்தநிலையில்,  லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா
மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2
மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும்
அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

நானு ஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: ஒருவர் காயம் | Cattle Lorry Accident In Nanuoya One Injured

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள்
இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல்
தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள்
தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்