பிரபல இந்திய பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக விசாரணையில் இருந்த அனைத்து வழக்குகளையும் மூட மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முடிவு செய்துள்ளது.
இது ஒரு சாதராண தற்கொலை வழக்கு என இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் படி, நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தரவு
இந்த நபர்களுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்ததிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிபிஐ தனது இறுதி அறிக்கையுடன் ஆவணங்கள் மற்றும் சாட்சியாளர்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளதுடன், வழக்கை விசாரிக்க ஏப்ரல் 8 ஆம் திகதி நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14, 2020 அன்று தனது மும்பை வீட்டில் உயிரை மாய்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.