முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிர்ச்சினை : மோடியின் அறிவிப்பு

இந்திய (India) கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து மோடிக்கு “இலங்கை மித்ர விபூஷண” விருது வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

அந்த வகையில் இந்திய கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிர்ச்சினை : மோடியின் அறிவிப்பு | Modi Announces Sri Lanka India Fishermen Agreement

2019 பயங்கரவாதத் தாக்குதல், கொரோனா தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.

எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும் தொலைநோக்குப் பார்வையான “மகாசாகர்” ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு.

வரலாற்று உறவுகள் 

ஜனாதிபதி அநுரவினால் இன்றைய தினம் “இலங்கை மித்ர விபூஷண” என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிர்ச்சினை : மோடியின் அறிவிப்பு | Modi Announces Sri Lanka India Fishermen Agreement

அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது.

இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்