அமெரிக்காவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் சிறந்த வங்கியாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏ தர விருது
குளோபல் பைனான்ஸ் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த விழாவில் நந்தலால் வீரசிங்கவுக்கு ஏ தர விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வு ரீதியான நிதிக் கொள்கை, தூரதிருஷ்டியான பொருளாதார நோக்கு, சர்வதேச சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கிக்கு வழங்கிய சிறந்த தலைமைத்துவம் என்பவற்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருது வழங்கும் விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் உலக வங்கியின் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருடனும் நந்தலால் வீரசிங்க சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்ததாக மத்திய வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.