நாட்டின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையின் நேற்று (28) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பணவீக்கம்
நாட்டின் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) அண்மையில் தெரிவித்திருந்தார்.
2025 ஆம் ஆண்டு இலங்கையின் பணவீக்கம் (Inflation in Sri Lanka) மேலும் உயரக்கூடும் என்றும் பணவீக்கத்தை 5 சதவீதத்தில் பேண எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.