முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல்

2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு மற்றும் நிதி அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார அறிக்கை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். 

பொருளாதார சுருக்கம்

இதன் போது ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த வருடம் நாட்டின் பொருளாதார சுருக்கம் 2.3 வீதமாகக் காணப்பட்டது.

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல் | Central Bank Releases Annual Economic Review

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்

வரலாற்றில் பதிவான மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு, நாட்டில் 7.3 வீதமாக பொருளாதார சுருக்கம் காணப்பட்டதுடன், பொருளாதாரம் மிகவும் நிலையற்றதாகவும் இருந்தது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியை காட்டியுள்ளது.

பணவீக்கம்

2022 ஆம் ஆண்டில் 69.8 வீதமாகக் காணப்பட்ட அதிகூடிய பணவீக்கமானது, 2023 ஆம் ஆண்டில் 5 வீதமாகக் குறைக்கப்பட்டது.  2023 ஆம் ஆண்டு அதிகரித்திருந்த வட்டி வீதங்கள், தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல் | Central Bank Releases Annual Economic Review

தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்!

தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்!

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு ஊழியர்கள் ஊடான வருமானம் மற்றும் சுற்றுலா வருமானங்கள் அதிகரிப்பை காட்டியுள்ளது.

அத்துடன், 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 1.9 பில்லியன் டொலராக இருந்த நாட்டின் மொத்த கையிருப்பு, ஆண்டின் இறுதியில் 4.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி

2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 363.11 சதமாக இருந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி, கடந்த வருட இறுதியில் 323.92 சதமாக குறைவடைந்துள்ளது.

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல் | Central Bank Releases Annual Economic Review

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள மாலைதீவு

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள மாலைதீவு

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு 8. 4 வீதமாக இருந்த அரச வருமானம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 11.1 வீதமாக அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114.2 வீதமாக இருந்த அரச கடன், 2023 ஆம் ஆண்டு 103.9 வீதமாக குறைவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட விரிவான கடன் திட்டத்தில் இணக்கம் காணப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் ஊடாக, பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரண்டு ராசிக்காரர்களை தேடி வரும் செல்வசெழிப்பு! நாளைய ராசிபலன்

இரண்டு ராசிக்காரர்களை தேடி வரும் செல்வசெழிப்பு! நாளைய ராசிபலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.