பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (21.04.2025) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அவரை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க, கடந்த மார்ச் 27 ஆம் திகதி, இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் சுமத்தப்பட்ட 03 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


