முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆந்திர முதல்வராக 4ஆவது முறை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திர பாபு நாயுடு (Chandrababu Naidu) அபாரமான வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

விஜயவாடா (Vijayawada) புறநகர் பகுதியின் கண்ணவரத்தில் இன்று (12.6.2024) இடம்பெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 4 வது முறையாக ஆந்திர முதல்வராக அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்

ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் (Pawan Kalyan) துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளதுடன் மொத்தமாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

ஆந்திர முதல்வராக 4ஆவது முறை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு | Chandrababu Naidu Take Oath Chief Minister Andhra

இதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy
) தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன.

கடந்த 4 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி

இதன்படி, ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆந்திர முதல்வராக 4ஆவது முறை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு | Chandrababu Naidu Take Oath Chief Minister Andhra

சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சீவி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்