காசா பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இஸ்ரேல் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலை
இஸ்ரேல் மேற்கொள்ளும் அவ்வாறான முயற்சிகள் தற்போதைக்கு சிக்கலாகியுள்ள நெருக்கடி நிலையை மேலும் தீவிரப்படுத்துவதுடன், அப்பிரதேசத்தில் வசிக்கும் பலஸ்தீன் மக்களின் கவலைக்குரிய நிலையை மேலும் நெருக்கடிக்குள் தள்ள நேரடியாக வழிசெய்யும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான பின்னணியில் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு போர்நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.
நிரந்தர சமாதானம்
மேலும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத்தரப்பினரும் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெத்து, கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொண்டு பிராந்தியரத்தில் நிரந்தர சமாதானமொன்றை கட்டியயெழுப்ப பாடுபட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.