எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைக்கு பெண்
சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து,
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று
உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக
இலங்கை போக்குவரத்து சபை தற்போது மரியானா அகழிக்கு கீழே மூழ்கிவிட்டதாகவும்,
இந்த நாட்டில் இலங்கை போக்குவரத்து சபையை அழித்தவர்கள் கடந்த கால
அரசியல்வாதிகள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள், பஞ்சமில்லாத பூமியில்
ஒரு நரகமாக உள்ளன.
தற்போது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வெற்றிடங்களை நிவர்த்தி
செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை போக்குவரத்து சபை மீண்டும்
கட்டமைக்கப்பட்டு லாபகரமான நிறுவனமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

