முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் இருந்தும் மின்சாரத்தை துண்டித்தமை தொடர்பில் பெரும் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஊடாக அறிவிப்பு
மின் கட்டணத்தை கட்டுவதற்கான கால அவகாசம் தொலைபேசியில் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கப்பட்டு காலம் இருந்தும் அதனையும் பொருட்படுத்தாது இரு வணிக நிலையங்களுக்கு மின்சாரத்தினை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் இரு வணிக நிலையங்களுக்கு எதிர்வரும் 29.10.2024 ஆம் திகதி வரை மின்சாரம் கட்டுவதற்கான கால அவகாசம் உள்ளது என மின்சார சபையின் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
22.10.2024 இன்று மின்சாரத்தினை துண்டிக்கும் ஊழியர் ஒருவர் மின்சாரத்தினை துண்டித்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின்சார சபையின் இவ்வாறான செயற்பாட்டினை வணிகர்கள் இருவரும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

