முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊடகவியலாளரை வெளியேற்றிய சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி (Chavakachcheri) நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகரசபைத் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். 

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த கூட்டம் இன்று (19.08.2025) செவ்வாய்க்கிழமை நகரசபைத் தவிசாளர் வடிவேலு சிறிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 

இதில் உபதவிசாளர் ஞா.கிசோர் சென்ற கூட்ட அறிக்கை வாசித்துள்ளார். இதன்போது சென்ற கூட்ட அறிக்கையில் பல விடயங்கள் விடுபட்டுள்ளதாகவும் , யார் யார் என்ன கருத்து முன்வைத்தார்கள் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை எனவும் ஊடகவியலாளர் ஒருவர் தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

நகரசபைத் தவிசாளர் 

உடனே உபதவிசாளரின் உரையை இடைநிறுத்திய நகரசபைத் தவிசாளர் , அங்கிருந்த ஊடகவியலாளரை வெளியேற்றுமாறு நகர சபை உத்தியோகஸ்தர்களுக்கு பணித்துள்ளார். 

ஊடகவியலாளரை வெளியேற்றிய சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் | Chavakachcheri Council Chairman Expels Journalist

அதனையடுத்து கூட்டத்தில் இருந்த ஊடகவியலாளர் , தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதிலும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியில்லை என கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். 

உள்ளூராட்சி சபைகளின் மாதாந்த கூட்டங்களில் ஊடகங்கள் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சபைகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகர சபையில் மாத்திரம் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என ஊடகவியலாளரை அங்கிருந்து தவிசாளர் வெளியேற்றிய சம்பவம் சக ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளரை வெளியேற்றிய சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் | Chavakachcheri Council Chairman Expels Journalist

சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் தெரிவின் போது , ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சபையில் நடைபெறும் விடயங்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதை தடுக்கும் முகமாகவே ஊடகவியலாளரை சபையில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும், 

குறிப்பாக சென்ற கூட்ட அறிக்கையில் உள்ள குறைபாடுகளை உபதவிசாளர் சுட்டிக்காட்டி உரையாற்றும் போது ஊடகவியலாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தியமை தவிசாளர் தனது தவறுகளை வெளியில் தெரியாமல் தடுக்கவே என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.