முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை!

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத்
தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம்
அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று (15) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை
முன்வைத்து உரையாற்றினார்.

நாய்கள் காப்பகம் 

நகரத்தில் கட்டாக்காலி நாய்களினால் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை
எதிர்நோக்குவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது.

நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை! | Chavakachcheri Council To Establish A Dog Shelter

நாய்களை நகரத்தில் இருந்து அகற்றி கருத்தடை செய்து பாராமரிக்க வேண்டிய தேவை
உள்ளது.
வெறுமனே வீதிகளில் திரிகின்ற நாய்களுக்கு உணவினை போடுவது மட்டும் ஜீவகாருண்யம்
இல்லை.

நாய்களை உரிய முறையில் சிகிச்சையளித்து கருத்தடை செய்து பராமரிக்க
வேண்டும்.

எனவே எமது நகரசபை எல்லைக்குள் உள்ள கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு
கால்நடை வைத்தியசாலை அமைந்துள்ள சூழலில் நாய்கள் காப்பகம் ஒன்றை
அமைக்க வேண்டும்.

பிரேரணை

இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நாய்கள் காப்பகம் அமைக்கும் பணியை
எமது சாவகச்சேரி நகராட்சி மன்றமே முதன்முதலில் முன்னெடுக்கின்றது.

நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை! | Chavakachcheri Council To Establish A Dog Shelter

அதனால்
பல்வேறு தரப்பினரும் எமது முன்மாதிரியான வேலைத்திட்டத்திற்கு பெரும்
பங்களிப்பினை வழங்குவார்கள் என தனது பிரேரணையை முன்வைத்து உபதவிசாளர் கிஷோர்
தெரிவித்தார்.

குறித்த பிரேரணையை வரவேற்ற சபை உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தனியார்
அமைப்புக்கள் நாய்கள் காப்பகம் அமைத்து இடைநடுவில் கைவிட்டதினை போலல்லாமல்
சிறப்பாக தொடர்ச்சியாக முன்னேடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு குறித்த
பிரேரணையினை ஏகமனதாக நிறைவேற்றினர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்