வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இரசாயனங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் (Bandaranaike International Airport) வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொழும்பு-10 (Colombo) பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதியான சிகரெட்டுகள்
இந்தநிலையில், சந்தேக நபரிடமிருந்து இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்க கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாயில் (Dubai) இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) விமானமான UL-226 இல் இன்று (14) காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.