முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட மக்கள் – சூத்திரதாரிகள் யார்: சீறிப்பாயும் ஈ.பி.டி.பி.

வடக்கு கிழக்கில் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் நீதியான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்பட
வேண்டு்ம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்
பன்னீர்ச்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில எமது மக்கள் எதிர்கொண்ட இவ்வாறான அவலங்கள் பற்றிய
உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதால், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு
எதிராக அவை பயன்படுத்தப்படுவதாகவும், செம்மணி புதைகுழி தொடர்பா நீதியான
விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக
வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் (Jaffna) ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இதனைத்
தெரிவித்தார்.

அரசியல் பரப்பிலும் சமூக ஊடகங்கள்

மேலும், “பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. உள்ளூராட்சி சபைகளை அமைப்பது பற்றிய எமது நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழ் அரசியல் பரப்பிலும் சமூக ஊடகங்கள் மத்தியிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பேசுபொருளாக மாறியிருந்தனர்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட மக்கள் - சூத்திரதாரிகள் யார்: சீறிப்பாயும் ஈ.பி.டி.பி. | Chemmani Demanding Justice For Mass Grave Victims

அண்மைக் காலத்தில் ஊடக நேர்காணல்களை அவதானிப்பீர்களாயின் அதில் கலந்து கொள்ளுகின்ற அரியல்வாதிகளும் சரி, நாடாளுமன்றில் சிறப்புரிகைளுக்குள் பதுங்கி நின்று பேசுகின்றவர்களும் சரிஇ டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை உச்சரிப்பதற்கு மறப்பதில்லை.

அதேபோன்று சமூக ஊடகங்களிலும் பார்ப்போமானால்
அவர்களுடைய புரோமோக்கள் என்று சொல்லப்படுகின்ற முன்னோட்ட காணொளிகளில்
டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக சொல்லப்படுகின்ற கருத்துக்களுக்கு
இடம்கொடுக்கப்படுகின்றது.

மண்டைதீவில் இடம்பெற்ற படுகொலைகள்

இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், 90 ஆம் ஆண்டு
காலப் பகுதியில் மண்டைதீவில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் மற்றும்
காணாமல் போனமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது தலைமையை விசாரிக்க
வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட மக்கள் - சூத்திரதாரிகள் யார்: சீறிப்பாயும் ஈ.பி.டி.பி. | Chemmani Demanding Justice For Mass Grave Victims

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை பொறுத்தவரையில் அவர் செயற்பாடுகள்
குறுகிய சுயநலன் சார்ந்தவை. மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி அந்த அவலங்களுக்கு
எதிராக குரல் கொடுக்கின்ற ஒருவாராக தன்னை வெளிப்படுத்துவதன் மூலம், தன்னுடைய
அரசியலை பாதுகாத்துக் கொள்ளுகின்ற ஒருவர்.

அவரின் அரசியல் சீத்தவத்தை
பேசுவதென்றால், நீண்ட நேரம் பேச முடியும்.

இப்பொழுது மண்டைதீவு விவகாரத்தில் அக்கறை கொள்ளுகின்ற சிறீதரன் எம்பி,
நல்லாட்சி காலத்தில் என்ன செய்து கொணாடிருந்தார்? உண்மையில் மண்டைதீவு
விவகாலத்தில் அக்கறை உள்ள ஒருவராக இருந்திருந்தால், தாங்கள் இதயத்தினால்
இணைந்திருந்த நல்லாட்சி காலத்தில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை
கண்டறிந்திருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் அளித்திருக்க
வேண்டும். ஆனால் நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதுன்பது
வெளிப்படையாகத் தெரிகின்து.

ஆதாரங்களுடன் பதிவு செய்யுங்கள்

இதனைப் புரிந்து கொண்ட நீதியமைச்சர், வெறுமனே
அரசியல் நோக்கங்களின் அடிப்படையி்ல் கருத்துக்களை முன்வைக்காது ஆதாரங்களுடன்
முறைப்பாடுகளை பதிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையிலேயே, செம்மணிப் பகுதியில் சித்தும்பாத்தி மயானத்தில்
எலும்புக்கூடுள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட மக்கள் - சூத்திரதாரிகள் யார்: சீறிப்பாயும் ஈ.பி.டி.பி. | Chemmani Demanding Justice For Mass Grave Victims

அதன் அடிப்படையில் அணையா
விளக்குகள் என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செம்மணிப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவது ஆச்சரியான விடயமல்ல.
கிருஷாந்தி படுகொலை வக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்கள், செம்மணிப்
பகுதியில் சுமார் 600 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்து
புதைக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி விவகாரத்தினை மூடி மறைப்பதற்கான முயற்சிகள்
முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தினை நாடாளுமன்றில்
பேசுபொருளாக்கியதன் மூலமும், சர்வதே மன்னிப்பு சபை போன்ற மனித உரிமை
அமைப்புகளிதும் அக்கறைக்குரிய விடமாக மாற்றி, அப்போதைய அரசாங்த்திற்கு
அழுத்தத்தினை ஏற்படுத்தி இருந்தோம்.

பின்னர், செம்மணியி்ல் வெளிப்படையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய
விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எமது ஐந்து
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி
வைக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக சர்வதேச நாடுகளின் இராஜதந்திர மட்டங்களின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

சுயாதீனமான நீதி விசாரணைகள்

இவ்வாறான நிலையில் தற்போதும், செய்மணி உட்பட மனிதப் புதைகுழிகள் இருப்பதாக
குற்றஞ்சாட்ப்படுகின்ற, சந்தேகப்படுின்ற அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகள்
முன்னெடு்க்கப்பட்டு, மனித எச்சங்கள கண்டுபிடிக்கப்படுமாயின், அவை தொடர்பாக
சுயாதீனமான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை எந்தக் காலப் பகுதியில்
புதைக்கப்பட்டன, அவற்றுடன் சம்மந்தப்பட்டவர்கள் யார்? போன்ற வீடயங்கள்
வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமல் இருக்கின்றமையினால்,
ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் நியாயங்களையும் எம்மால்
முன்னெடுக்கப்பட மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களையும் விமர்சிக்க
திராணியற்ற… அரசியலில் தமது அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத
ஆசாமிகளும் தம்மை நிலைநிறுத்த எம்மீதான போலியான குற்றச்சாட்டுகளை
சுமத்துவதற்கு இவ்வாறான விவகாரங்கள் இலகுவாக பயன்படுத்திக் கொள்கின்றனர்”
என்று தெரிவித்தார். 

https://www.youtube.com/embed/7Cb7gBmOW6w

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.