எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு ஆதரவாக உடன் நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு தங்காலையில் இன்று (20.11.2025) நடைபெற்ற “முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு குழந்தைகள் பலியாவதைத் தடுப்பதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் பாதுகாப்பு
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கும் தனது அரசாங்கத்தின் கீழ் அரசியல் பாதுகாப்பு இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் வலையமைப்பை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்மூலம், போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

