இலங்கையில் சீன நாட்டவர்கள் குழு ஒன்று கொழும்பில் ஒரு சீன தொழிலதிபரை கடத்தி USDT கிரிப்டோகரன்சி அமைப்பு மூலம் சுமார் 60,000 அமெரிக்க டொலர்களை ( (ரூ. 180 மில்லியன்) கொள்ளையடித்துள்ளது.
இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் ஹுவா ஹுய் என்ற கடையை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
விசாரணை
காவல்துறையின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 22) இரவு 9.00 மணியளவில் அவர் ஒரு காரில் கடத்தப்பட்டுள்ளார்.
ஒரு நாள் முழுவதும் தான் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சந்தேக நபர்கள் பணத்தைத் திருடி சனிக்கிழமை வீதியோரத்தில் விட்டுச் சென்றதாகவும் அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர், தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதன்படி, நேற்று மாலை முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.