சீன (China) இராணுவத்தின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) விரைவில் இலங்கை (Sri Lanka) வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) காலை கிழக்கு சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள சூஷானில் உள்ள இராணுவத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அதன் சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை உள்ளிட்ட13 நாடுகளுக்கு செல்லவுள்ளது.
அமைதிப் பேழை
கடந்த 2008 ஆம் ஆண்டு அமைதிப் பேழை’ (Mission Harmony) எனும் திட்டத்தை தொடங்கிய இந்த கப்பல், இந்த ஆண்டும் அதன் பயணத்தை தொடங்கியுள்ளது.
‘அமைதிப் பேழை’ என்பது உள்ளுர் மக்கள், சீன நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் ஆகியோருக்கு பொதுவான மற்றும் பரவலான நோய்களுக்கான இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்கும் சேவையாகும்.
இந்த கடல்சார் மருத்துவ கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அத்துடன், இதில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.