ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகத்தில் (Chinese University of Hongkong) கல்வி கற்கும் 16 இளங்கலை மாணவர்கள் ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு 10 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் குழு இன்று (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சுற்றுலா செல்ல திட்டம்
குறித்த மாணவர்கள் “இலங்கையில் பெண்களின் உரிமைகள்” என்ற தலைப்பில் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றை தயாரிக்க உள்ளனர்.
இது தவிர ஜா-எல, பமுனுகம கொன்சால்வ்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களின் உதவியுடன் மற்றுமொரு செயற்திட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளவுள்ளனர்.
இந்த ஆய்வுப் பயணத்தின் பின்னர், இந்த மாணவர்கள் சீகிரியா மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.