நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சுற்றறிக்கை இன்று (09.12.2025) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluwewa) தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் திறப்பது
தற்போதைய சூழ்நிலை காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பது இந்த மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள அனைத்து பாடங்களும் ஜனவரி மாதத்தில் முடிந்தவரை நடத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே (Indika Liyanage) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

