கம்பஹா ஜா – எல பகுதி தற்போது வெள்ள நீரினால் மூழ்க ஆரம்பித்துள்ளது.
ஜா – எல வெளிகம்பிட்டிய ஆகிய பகுதிகளே இவ்வாறு நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
இதன்படி மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் ஜா-எல பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதால் ஒருவழி போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது.








