புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும்
முனைப்பில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (28) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலந்துரையாடல்
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின்
ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் மற்றும்
ஊடகவியலாளர்கள் கொண்டிருந்தனர்.