Courtesy: Thavaseelan
முல்லைத்தீவில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம்(20.02.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க
அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைச் சூழலை தூய்மைப்படுத்தும் மாபெரும்
சிரமதானப்பணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23) நடைபெறவுள்ளது.
முன்னாயத்த கலந்துரையாடல்
இவற்றை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான
முன்னாயத்த கலந்துரையாடலாக இது இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்,
உதவித்திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவத்தினர்,
பொலிஸார், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.