Courtesy: H A Roshan
திருகோணமலை (Trincomalee) மாவட்ட தூய்மை இலங்கை (Clean Sri Lanka) திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு இன்று (01) கிழக்கு மாகாண ஆளுுநர் செயலகத்தில் ஒன்று கூடியது.
முக்கிய விடயங்கள்
இதன்போது, திருகோணமலை மாவட்டத்திற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த ஒன்று கூடலில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதியமைச்சர் அருண் கேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.