முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கற்கோவளம் இராணுவ முகாம் விடுவிப்பு தொடர்பில் வெளியான தகவல்

கற்கோவளம் பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பு செய்து 14
நாட்களுக்குள் இராணுவத்தை வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து
அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய அரசாங்கத்தின்
அமைச்சரவை பதவியேற்று சில மணி நேரங்களுக்குள் இந்த செய்தி வெளியாகியது.

மூன்று உரிமையாளர்களுக்கு சொந்தமான அண்ணளவாக ஆறு ஏக்கர் நிலப்பரப்பிலேயே இந்த
இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இராணுவ முகாம் 

குறித்த இராணுவ முகாமை அகற்றிவிட்டு,
அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு கடந்த கால அரசாங்கத்தினால் இராணுவத்தினருக்கு
அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கற்கோவளம் இராணுவ முகாம் விடுவிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Clearance Of Land Of Kalkovalam Army Camp

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த காணியின் உரிமையாளர்களது பெயரை பருத்தித்துறை
பிரதேச செயலகத்திடம் விசாரித்த இராணுவ அதிகாரிகள், அந்த காணிகள் அந்த
உரிமையாளர்களது சொந்த காணிகள் தானா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டனர்.

இந்நிலையில் அந்த காணிகள், இராணுவம் குறித்துரைத்த அந்த மூன்று
உரிமையாளர்களுடையது தான் என பருத்தித்துறை பிரதேச செயலகம்
உறுதிப்படுத்தியிருந்தது.

மக்கள் போராட்டம்

இவ்வாறான சூழ்நிலையில் இராணுவம் அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது அங்கிருந்த
ஊர் மக்கள் ஒன்று கூடி கடந்த (2023.08.14) அன்று இராணுவத்தை வெளியேற வேண்டாம் என
போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து பருத்திதுறை பிரதேச செயலகத்திடம் மகளிர்
ஒன்றினை கையளித்தனர்.

கற்கோவளம் இராணுவ முகாம் விடுவிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Clearance Of Land Of Kalkovalam Army Camp

பருத்தித்துறை பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும், குறித்த பகுதியில் மணல்
அகழ்வு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல்/வியாபாரம் இடம்பெறுவதாக
தெரிவித்து அதனை இராணுவமே கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் மக்கள்
குறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவில்லை.
இந்நிலையிலேயே இராணுவத்தினரை அந்த பகுதியில் இருந்து 14 நாட்களுக்குள்
வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.