நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சந்தையில் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.
மேலும், சந்தையில் நாட்டரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அரிசியின் விலை
இந்நிலையில், அரிசி விற்பனைக்காக அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அரிசியின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை திருத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.