சமீபத்தில் படகு மூலம் இலங்கையை அடைந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal ratnayake) , இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீமை(rauf hakeem) கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில்இன்று(23) உரையாற்றிய ரத்நாயக்க, இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அரசாங்கம் இந்த விஷயத்தை மனிதாபிமான முறையில் கையாளும் என்று கூறினார்.
அகதிகள் மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள்
அகதிகள் மியான்மருக்கு(myanmar) நாடு கடத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார், அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை வலியுறுத்தினார்.
“இந்த மக்கள் இரக்கத்துடனும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளும் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும். அரசியல் ஆதாயத்திற்காக இந்த சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என அமைச்சர் ரத்நாயக்க கூறினார்.
முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு
அமைச்சர் ஹக்கீமை நேரடியாக பாரத்து உரையாற்றிய அவர்,இப்போது இலங்கையில் முஸ்லிம்களிடையே பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ளது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்ல, மாறாக தேசிய மக்கள் சக்தி (NPP)என்று குறிப்பிட்டார்.
“நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் வாக்களித்தது தேசிய மக்கள் சக்திக்குதான் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அல்ல,” என்று அவர் தெரிவித்தார்.