முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம்! அரசாங்கம் அறிவிப்பு

நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,”தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம்.

தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது.  

தேங்காய்களின் விலை

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தோட்ட நிறுவனங்கள் ஊடாகவும், சதொச ஊடாகவும் தேங்காய்களை விநியோகித்துக் கொண்டே இருக்கின்றோம்.

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம்! அரசாங்கம் அறிவிப்பு | Coconut Price In Sri Lanka

எவ்வாறாயினும் நாம் இதனை முகாமை செய்து கொண்டு பயணிக்கின்றோம் என்பது உண்மை. சில துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் அரசாங்கம் அவற்றுக்கான முழுமையான முயற்சியுடன் தலையிட்டு வருகிறது.

இவை பருவ கால பிரச்சினைகளாகும். அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

 அரிசி தட்டுப்பாடு

இதேவேளை, அரிசி விலை தொடர்பில் எவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதில்லை என்பதில் அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது.

நாட்டரிசியை விட சிவப்பு அரிசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம்! அரசாங்கம் அறிவிப்பு | Coconut Price In Sri Lanka

ஆனால்  நாட்டரிசி பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 70 மெட்ரிக் தொன் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையில் அதனை விட அதிகமாகவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.

இம்முறை 7 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு படிப்படியாக தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.

பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைந்துள்ளது. இதுவே பணவீக்க வீழ்ச்சியாகும்.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு எவரேனும் மோசடிகளில் ஈடுபட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

you may like this

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.