முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உச்சம் தொடும் தேங்காய் விலைக்கு தீர்வு : வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி (Sunimal Jayakodi) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக அவர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.

தென்னை உற்பத்தி வீழ்ச்சி

அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்சம் தொடும் தேங்காய் விலைக்கு தீர்வு : வெளியான அறிவிப்பு | Coconut Prices Increase Relief Plantation Owners

கடந்த இரண்டு மூன்று வருடங்களைப் பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டில் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.

குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல்

தேங்காய் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை (Coconut Cultivation Board) தீர்மானித்துள்ளது.

உச்சம் தொடும் தேங்காய் விலைக்கு தீர்வு : வெளியான அறிவிப்பு | Coconut Prices Increase Relief Plantation Owners

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department of Government Information) இன்று (10.03.2025) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தேவையான தென்னை நாற்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை நாற்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் இதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.