சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு மக்களுக்கு வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
தேங்காய் நெருக்கடி
இந்நிலையில், தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் கிடைக்கும் தென்னை உற்பத்திகளையே இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தகம் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.