நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலை காரணமாக இளநீரின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாவைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, சிறிய அளவிலான ஒரு இளநீரின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விலை உயர்வு
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீருக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கான காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
You May Like THis