முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிள்ளையானின் ஆதரவாளரை மட்டக்களப்பில் சுற்றிவளைத்த சி.ஐ.டி

மட்டக்களப்பில் (Batticaloa) பிள்ளையானின் (Pillayan) சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24) குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்னையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்
பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் (2006 டிசம்பர் 15 ஆம் திகதி) கடத்தி
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கை

மட்டக்களப்பிலுள்ள காரியாலயத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிள்ளையானின் ஆதரவாளரை மட்டக்களப்பில் சுற்றிவளைத்த சி.ஐ.டி | Colleague Of Pillayan Was Arrested In Batticaloa

தற்போது, அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த
ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்த அந்தப் பகுதியைச்
சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணைப் பிரிவினால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுட்டு படுகொலை

பிள்ளையான் கைதை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட
பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான முன்னாள்
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கைது செய்யப்பட்டார்.

பிள்ளையானின் ஆதரவாளரை மட்டக்களப்பில் சுற்றிவளைத்த சி.ஐ.டி | Colleague Of Pillayan Was Arrested In Batticaloa

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்பு, கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவில் வைத்து அவரது சகாவான சசிதரன் தவசீலன்
மட்டு சந்திவெளியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேற்கொண்ட விசாரணை

இதையடுத்து, இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச்
சேர்ந்த செந்தூரன் கடந்த ஜூலை ஏழாம் திகதி தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை
செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் யூலை (27)
இனியபாரதியின் மற்றும் ஒரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள்
திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

பிள்ளையானின் ஆதரவாளரை மட்டக்களப்பில் சுற்றிவளைத்த சி.ஐ.டி | Colleague Of Pillayan Was Arrested In Batticaloa

அத்தோடு, பிள்ளையான் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி
சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித்
என்பவரை கடந்த 13 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாம் பொறுப்பாக இருந்த
கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை ஏழு பேர் கைது
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.