கடுகதி தொடருந்தில் யானைக் கூட்டம் மோதியதால் மட்டக்களப்பு (Batticaloa) மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து கல்ஓயா பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது
இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்து செய்ய நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் தொடருந்து தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி தொடருந்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தடம் புரண்ட தொடருந்தின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.