முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டையை கைப்பற்றிய NPP – கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு

புதிய இணைப்பு

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று (18) பதவி ஏற்றுள்ளார்.

2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட வேட்பாளராக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் (Vraie Cally Balthazaar) நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்காம் இணைப்பு

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி  பல்தஸார் (Vraie Cally Balthazaar) வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு | Colombo Municipal Council To Elect New Mayor Today

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயராக விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு | Colombo Municipal Council To Elect New Mayor Today

மூன்றாம் இணைப்பு

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.  

இரண்டாம் இணைப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெறுகிறது.

மேயர் தெரிவுக்கான தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா என்பது குறித்து சபையில் ஒரு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன திறந்த வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் இன்று (16) நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை உள்ளூராட்சி ஆணையாளர் சமீபத்தில் வெளியிட்டார்.

அதன்படி, கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் புதிய மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர்.

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு | Colombo Municipal Council To Elect New Mayor Today

அத்துடன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 உறுப்பினகளுமாக 04 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

இதுதவிர, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகியிருந்தனர்.

இன்று நடைபெறும் வாக்கெடுப்பு

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கோட்டையை கைப்பற்றிய NPP - கொழும்பு மாநகர சபை மேயர் சற்றுமுன் பதவியேற்பு | Colombo Municipal Council To Elect New Mayor Today

இந்தநிலையில், தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கு மேல் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், கொழும்பு மாநகர சபையின் மேயர்களை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/Iii_oEaLAc4https://www.youtube.com/embed/Iii_oEaLAc4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.