கொழும்பு (Colombo) வடக்கு பகுதிகளில் பல தொடர் மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் ஆபத்தான நிலையில் வாழ்வதாகவும் சில தொடர்மாடி குடியிருப்புக்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க (Najith Indika) தெரிவித்துள்ளார்.
மக்கள் இது தொடர்பில் பல முறைப்பாடுகளை தெரிவித்ததை தொடர்ந்து இன்று (18) கொழும்பு வடக்கு பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை அவர் மேற்கொண்டுள்ளார்.
தொடர்மாடி குடியிருப்பு
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்மாடி குடியிருப்பு புனரமைப்பு தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் கோரப்பட்ட டொண்டர்களில் அதிகமான தொகை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.
அதனாலே அவற்றை புனரமைப்பு செய்ய முடியாலுள்ளது.
முறையற்ற திட்டம்
கடந்த ஆட்சி காலத்தில் முறையற்ற திட்டத்தில் அவசரமாக கட்டப்பட்ட பல தொடர்மாடிகள் இருக்கின்றன.

அவற்றில் மக்களை திட்டங்கள் இல்லாமல் குடியேற்றியுள்ளனர் இதனால் மக்கள் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர்.
கழிவுகள் நிறைந்து வழிதல் மற்றும் போதை பொருள் பாவிப்பவர்களின் அதிகரிப்பு போன்ற பல்வோறு பிரச்சினைகளை நாம் படிப்படியாக தீர்க்கவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

