கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (06) இரண்டாவது நாளாக சரிவைப் பதிவு செய்துள்ளது.
இது ஒரு வரலாற்று எழுச்சிக்குப் பின்னர் ஏற்பட்டு வருகின்ற பின்னடைவை பிரதிபலிக்கிறது.
இந்தநிலையில் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடு 170.82 புள்ளிகளால் குறைந்து 15,878.60 புள்ளிகளாக நிலவியது.
8.57 பில்லியன் ரூபாய் வருமானம்
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, 299.13 புள்ளிகள் சரிவடைந்து 26 நாட்கள், பங்குச்சந்தையில் ஏற்பட்டு வந்த தொடர்ச்சியான உயர்வு முடிவுக்கு வந்தது.
பங்குச்சந்தை உயர்ச்சியை பொறுத்தவரையில், 16,000 புள்ளிகளை அதன் வர்த்தகம் கடந்திருந்தது.
இதேவேளை இன்று பங்குச்சந்தையின் போக்கில் சரிவு இருந்தபோதிலும் 8.57 பில்லியன் ரூபாய் வலுவான வருமானத்தை கொழும்பு சந்தை பெற்றுக்கொண்டது.