கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (15) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 80.29 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.36% வீழ்ச்சியைப் பதிவு செய்து, இன்று 22,292.28 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மொத்தப் புரள்வு
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 5.6 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.