படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோருக்கு யாழ்.ஊடக (Jaffna) அமையத்தில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்றைய தினம் (27.04.2024) நடைபெற்றுள்ளது.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த
2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ்
நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால்
கடத்தப்பட்டார்.
இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
சுட்டுப்படுகொலை
இதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக
மீட்கப்பட்டார்.
மேலும், ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளராக
கடமையாற்றி வந்தவேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10
மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத
நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இவர்களை நினைவு கூறும் முகமாக இன்றைய தினம் யாழில் நினைவஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில், யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.
வெப்பநிலை தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் மோடியின் சகா!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |