மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 8ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது யாழ். ஊடக அமையத்தில் தலைவர் கு.செல்வக்குமாரின் தலைமையில் நேற்று (29) மாலை நடைபெற்றுள்ளது.
ஊடக கற்கைநெறி
இதன்போது, அஸ்வினின் திருவுருவ படத்திற்கு அஸ்வினின் பெற்றோர் மலர்மாலை அணிவித்துடன்
தேசிய பற்றாளர் விராஜ் மென்டீஸின் திருவுருவ படத்திற்கு, யாழ் பல்கலைகழ கலைப்பீடாதிபதி கலாநிதி ரகுராமும், ஊடக கற்கைகள் துறை தலைவர் பூங்குழலி ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அஸ்வின் மற்றும் தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவுரைகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஊடக அரங்கில் கருத்தாளமிக்க மற்றும் தீர்க்கதரிசனம் கூறும் கேலிச் சித்திரங்களால் அனைவரையும் கவர்ந்திழுத்து தனக்கெனவொரு முத்திரையை பதித்த முன்னணி கேலிச் சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சன் கடந்த 2016 ஆம் ஆண்டு உக்ரைனில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.