நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறி்த்த நிகழ்வானது மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு
தூபியில் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் விஸ்வலிங்கம்
ருத்திரன் தலைமையில் நேற்று(15) காலை நடைபெற்றுள்ளது
நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
1985 ஆம் ஆண்டு மேமாதம் 15 ஆம் திகதி இதே போன்று ஒரு நாளில் நெடுந்தீவு
கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த குமுதினி படகை வழி மறித்து கடற்படையினர்
அப்படகில் பயணம் செய்த ஏழு மாத பெண்குழந்தை உட்பட 36 பொதுமக்களை வெட்டி கொலை
செய்த கொடூர சம்பவம் நெடுந்தீவு கடற்பரப்பில் பதிவாகியது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வ மத குருக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.






