Courtesy: Sivaa Mayuri
2024 செப்டம்பர் 21ஆம் திகதியன்று நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை சீசெல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டேனி ஃபௌரே(Danny Faure) தலைமையிலான பொதுநலவாய கண்காணிப்புக் குழு கண்காணிக்கவுள்ளது.
இது தொடர்பான 15 பேர் கொண்ட குழுவை, பொதுநலவாய செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லாண்ட் பெயரிட்டுள்ளார்.
விடுக்கப்பட்ட கோரிக்கை
இலங்கையின் தேர்தல்கள் ஆணையகம் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த குழு அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில் பொதுநலவாய கண்காணிப்பாளர் குழு, செப்டம்பர் 15 முதல் 27 வரை இலங்கையில் தங்கி பணிகளில் ஈடுபடவுள்ளது.