யாழ்ப்பாணத்தில் (jaffna) அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayaka) கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரனவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மை
தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
அநுரகுமார திசாநாயக்கவின் குறித்த கருத்து இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
ஆதரிக்கும் சுமந்திரன்
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் (Jaffna) இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka)பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.