கொழும்பு புதிய முதல்வரை நியமிக்கும் வாக்கெடுப்பின் போது, மேல் மாகாண
உள்ளாட்சித் துறை ஆணையாளர், நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக ஐக்கிய மக்கள்
சக்தி கட்சியின் தோல்வியடைந்த முதல்வர் வேட்பாளர் ரிசா சரூக் குற்றம்
சாட்டியுள்ளார்.
தனது கட்சியால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளை மீறி, ஆணையர் சாரங்கிகா ஜெயசுந்தர
இரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பை நடத்த, தன்னிச்சையான முடிவை எடுத்ததாக
சரூக் கூறியுள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பு
ஆரம்பத்தில், ஆணையாளர், இரகசிய வாக்கெடுப்பு அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம்
வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அறிவித்தார்,
ஆனால் நடைமுறையின் படி, அந்த முறை, உறுப்பினர்களின், பெரும்பான்மை முடிவால்
தீர்மானிக்கப்பட வேண்டும் என்று சரூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைJO9NOயில், வாக்களிக்கும் முறை குறித்த முடிவும் இரகசிய வாக்கெடுப்பு
மூலம் எடுக்கப்படும் என்று ஆணையாளர் ஒருதலைப்பட்சமாக அறிவித்ததாகவும் அவர்
குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்போது, ஆளும் கட்சியே இரகசிய வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுத்தது
என்றும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தோல்வியடைந்த முதல்வர் வேட்பாளர் ரிசா
சரூக் குற்றம் சாட்டியுள்ளார்.

