இலங்கையில்(sri lanka) காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கொழும்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் போனவர்களின் 51 குடும்பங்கள் கலந்து கொண்டன.
அனுபவங்கள்,சவால்களை பகிர்ந்து கொள்வது
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் அனுபவங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒன்று கூடல் மனிதாபிமான இடத்தை வழங்கியது.
பங்கேற்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய அமைப்பை மேம்படுத்துவதில் பங்கேற்கவும் இது ஒரு வாய்ப்பை வழங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.